என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "உடல் பிரேத பரிசோதனை"
கபிஸ்தலம்:
தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள கணபதி அக்ரஹாரம் பகுதியில் ஒரு பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. நேற்று இந்த பெட்ரோல் பங்கில் பெட்ரோல் இருப்பு இல்லாததால் அரியலூர் மாவட்டம் வெங்கனூர் வடக்கு தெருவை சேர்ந்த சொக்கலிங்கம் மகன் திருமூர்த்தி (வயது 25). என்பவர் மட்டும் பணியில் இருந்தார்.
அவர் நள்ளிரவு பெட்ரோல் பங்கில் உள்ள ஒரு அறையில் மின் விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் இன்று காலை அந்த பெட்ரோல் பங்குக்கு சென்ற பொதுமக்கள் பங்க் ஊழியர் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி கபிஸ்தலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் மோகன் ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று திருமூர்த்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்குபதிவு செய்து திருமூர்த்தி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் கணபதி அக்ரஹாரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான 6 பேரின் உடல்கள் இன்னும் பிரேத பரிசோதனை செய்யப்படாமல் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளன.
தாங்கள் குறிப்பிடும் மருத்துவ வாரியத்தில் உள்ள டாக்டர்கள் மூலம் அந்த உடல்களை பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிடவேண்டும் என்றுகோரி கோரி அவர்களின் குடும்பத்தினர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அத்துடன் துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு காரணமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 லட்சமும் வழங்க உத்தரவிடவேண்டும் என்றும் கோரி மேலும் 2 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
மனுதாரர்கள் சார்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஆதர்ஷ் குமார் கோயல், அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய கோடை விடுமுறை கால அமர்வு முன்பு ஆஜரான வக்கீல், இந்த மனுக்களை அவசர வழக்காக கருதி உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த மனுக்கள் வருகிற ஜூலை 1-ந்தேதிக்கு பிறகு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு மற்றும் தடியடி சம்பவத்தில் பலியான 13 பேரின் உடல்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டிருந்தன. அவற்றை பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் சென்னை ஐகோர்ட்டில் 3 வக்கீல்கள் பொது நல வழக்கு தொடர்ந்தனர்.
அதன்படி பலியான 13 பேரின் உடல்களை மறு உத்தரவு வரும் வரை பதப்படுத்தி பாதுகாக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியிலேயே அனைத்து உடல்களும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பலியானவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யும் நடவடிக்கை தொடங்கப்பட்டது. நீதிபதிகள் முன்னிலையில் நடத்தப்படும் இந்த பிரேத பரிசோதனை முழுவதுமாக வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது.
நேற்று முன்தினம் வரை 7 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மற்ற 6 பேரின் உடல்கள் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த 6 பேரின் உறவினர்கள் யாரும் வராததால் அந்த உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை. இன்றும் அந்த 6 பேரின் உறவினர்கள் வராத காரணத்தால் அந்த உடல்களை பிரேத பரிசோதனை செய்வதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. #Thoothukudifiring
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்